கொடுக்கப்பட்டிருக்கும் 7 எழுத்துகளில் மறைந்திருக்கும் அதிகபட்ச சொற்களைக் கண்டுபிடிப்பதே 'வார்த்தையோடு விளையாடு'.
இதில் முக்கியமான சவால், நீங்கள் கண்டுபிடிக்கும் அனைத்து வார்த்தைகளும், நடு எழுத்தைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். மற்றொரு சவால், கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து எழுத்துகளும் சேர்ந்து வரும் அந்த ஒற்றை சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தைகள் எவ்வளவு என்பதையும், அவை எத்தனை எழுத்து என்பதையும் மேலே இருக்கும் கட்டங்களை வைத்து யூகிக்கலாம்.
விகடன் அகராதியில் இடம்பெற்றிருக்கும் சொற்கள் மட்டுமே இங்கு இடம்பெறும். சில சொற்கள் அகராதியில் இருந்தாலும், அன்றைக்கு நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சொற்களில் இல்லாமலும் போகலாம். எனவே, கட்டங்கள் அனைத்தையும் முடித்துவிட்டாலே நீங்க வின்னர்தான்!
எவ்வளவு யூகித்தும் விடை கண்டுபிடிக்க முடியவில்லையா? அடுத்த நாள், Yesterday answer பகுதிக்குச் சென்று விடைகளைத் தெரிந்துகொள்ளலாம்.